Saturday, May 27, 2006

காலத்தின் வேறொரு புள்ளியில் மீண்டும்



நண்பர்களே! நானும் வலைப் பதிக்க வந்தேன்னுதான் பேரு...

@ ஒரு இடத்தில பிரசுரமானதை இன்னுரு இடத்தில போடக்கூடாது (இந்த 'ஈ-போஸ்ட்டர்' ஒட்டற வேலையெல்லாம் நமக்கு ஆகாது), மேம்போக்கான விஷயங்களை எழுதறதை விட, தமிழ் தொலைக்காட்சித் தொடரின் 1542வது எபிஸோடுல மானாவரியா பிலாக்கானம் வைக்கிறதை பார்த்துத் தொலைக்கலாம், யாரோட தற்கொலைக்கு கூட்டுக் கலவி காரணம்ன்னு கிசுகிசு எழுதறதுக்கு பதிலா நம்மோட கண்ராவி பாடதிட்டதில எம்.ஏ தமிழையே படிச்சித் தொலைக்கலாம்...அப்படி இப்படின்னு ஏகப்பட்ட உதார் விட்டதில இரண்டு மூனு பதிவுக்கு பின்னர் வலைமனை இந்தியக் கோர்ட்களில் நிலுவையிலிருக்கும் சிவில் வழக்குகள் போல கிடப்பில் கிடக்க நேர்ந்து விட்டது.

சமீபத்தில எடுத்த என் மகள் சஞ்சனாவின் புகைப்படத்துடன் மறுபடியும் பிரவேசித்திருக்கிறேன். (என்ன பிரவேசமோ?! உனக்குதான் வெளிச்சம்ன்னு சொல்லறது காதில விழுது.)

மறு மொழியுங்கள் நண்பர்களே...

4 comments:

குழலி / Kuzhali said...

//@ ஒரு இடத்தில பிரசுரமானதை இன்னுரு இடத்தில போடக்கூடாது (இந்த 'ஈ-போஸ்ட்டர்' ஒட்டற வேலையெல்லாம் நமக்கு ஆகாது), மேம்போக்கான விஷயங்களை எழுதறதை விட, தமிழ் தொலைக்காட்சித் தொடரின் 1542வது எபிஸோடுல மானாவரியா பிலாக்கானம் வைக்கிறதை பார்த்துத் தொலைக்கலாம், யாரோட தற்கொலைக்கு கூட்டுக் கலவி காரணம்ன்னு கிசுகிசு எழுதறதுக்கு பதிலா நம்மோட கண்ராவி பாடதிட்டதில எம்.ஏ தமிழையே படிச்சித் தொலைக்கலாம்...அப்படி இப்படின்னு ஏகப்பட்ட உதார் விட்டதில இரண்டு மூனு பதிவுக்கு பின்னர் வலைமனை இந்தியக் கோர்ட்களில் நிலுவையிலிருக்கும் சிவில் வழக்குகள் போல கிடப்பில் கிடக்க நேர்ந்து விட்டது.
//
ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி/ரசனை இப்படி மொத்தமும் கிட(டை)ப்பதால் தானே வலைப்பதிவுகள் களைகட்டுகின்றது, தொடர்ந்து எழுதுங்கள்...

நன்றி

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//சமீபத்தில எடுத்த என் மகள் சஞ்சனாவின் புகைப்படத்துடன் மறுபடியும் பிரவேசித்திருக்கிறேன்.//

வாங்க. வாங்க. :)

புகைப்படம் நன்றாக இருக்கிறது.

அடிக்கடி வலைபதிவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். சிங்கப்பூரில் இருப்பவர்களுடன் மட்டுந்தான் உங்களுடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வீர்களா என்று சண்டைபிடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். தப்பிட்டீங்க. :)

துளசி கோபால் said...

குழந்தை அழகோ அழகு.

ஒரு வயது முடிந்திருக்கும். போனவருடம் நான் அங்கே வந்திருந்தபோது பிறந்தவராச்சே:-)))

வாழ்த்துகள்.

மானஸாஜென் said...

நன்றி குழலி! உண்மைதான், தட்டையான மாறுபாடு இல்லாத உலகம் எனக்கும் பிடிக்காதுதான், நான் சொல்லவந்தது எனக்கான ஆட்டவிதிகளை நான் தளர்த்திக் கொள்ளனும்ன்றதுதான். நீங்க சொன்னது போல word verification எடுத்திட்டேன், ஆனா இன்னமும் தெரியுது:(

மதி! நான் எப்ப வெளிய வந்தாலும் கரெட்டா கவனிச்சி ஆறுதலா ஒரு பதிவு போடறீங்க! ரொம்ப நன்றி! (உங்க மறுபொழியில தெரியற க்யூட் சிறுமி யாரு? ரொம்ப சமர்த்து)

துளசியக்கா! ரொம்ப சரியா சொல்லீட்டீங்க, சஞ்சனாவிற்கு ஒரு வருடம் முடிகிறது.(தமிழ் வருடப்பிறப்பில பிறந்தா ஏதோ என்னாலான தமிழ் தொண்டு!)
உங்க வலையை போன வாரம்தான் தோண்டிப் பார்த்தேன், சிங்கை அனுபவங்களைப் படிச்சேன், குமார், ஜெயந்தி, சித்ரா,ஜெயக்குமார் வழியா கேட்டப்பின் புகைப்படங்களையும் பார்த்ததில் ஒரு வட்டம் அடிச்சதுமாதிரி இருந்தது.)