Monday, May 02, 2005

மேலும் சில கவிதைகள்


'தேநீருக்கு சர்க்கரை போதுமா?
பால் சேர்ப்பீர்களா?
எவ்வகை தேயிலை உங்களுக்கு உகந்தது?'
மொழிகளின் கண்ணிகளில் சிக்கிக் கொண்டு நான்...
கருணை வழியும் உன் தண்-விழிகள்
மௌனமாய் என்னுள் அரும்புகளை முகிழ்க்கிறது
மனதின் இரைச்சல்களை இசையாக்கும்
தருணம் வாய்க்கையில்
தேநீர் கூட என் அன்பை சமர்ப்பிக்கும் உனக்குள்.


@


கால் மாற்றி
கால் மாற்றி நின்று
பார்த்துக் கொண்டேயிருந்தேன்
மத்தாப்புகளின் நினைவுகளோடு
வெல்டிங்கை
பார்க்காமல் இழந்திருந்தேன் நான்...
பார்த்துப் பார்த்தே இழந்திருந்தான் அவன்!


@

6 comments:

Anonymous said...

PASABA POR AQUI, PERO NO ENTIENDO TU PAGINA JEJEJ, BYE

Muthu said...

நல்லா இருக்கு.

மானஸாஜென் said...

நன்றி திரு.முத்து!


SABA OR QUIA ERO NON ENTIENDO TU AGINA JEJEJ  THANKS Mr.Anonymous

Moorthi said...

வலைப்பூ உலகத்திற்கும் வருகை தந்த எங்கள் மானஸாஜென் அவர்களை வருக வருகவென அன்போடு வரவேற்கிறேன்!

AJeevan said...

நன்றி ,.........
நல்லா இருக்கு

tamiljunction said...

Hi

Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com