
எனக்கு மிகவும் பிடித்த குறியீடு, எம்.எஸ் பாடிய மீரா பஜன்களுடன், ஒரு அழகான சிலையையும் நான் பார்த்ததிலிருந்து, மீராவை கோட்டோவியங்களாக்கிக் கொண்டிருந்தேன்.
Raag Meera என்னும் தலைப்பில் அவற்றை காட்சிப்படுத்தினேன்.
எளிமையும், இசைவும், கொண்ட கருப்புக் கோடுகள், தூய வெண்தாளில் மிதந்து கொண்டிருக்கும், இசை அனுபவங்கள். அவை.
இந்த மீரா என்னுடைய முகவரி அட்டையில் போடவென, கடையிலிருக்கும் கணினியை கொண்டு வரைந்தது. மிகக் குறைந்த பிக்ஸெல்லில் வரைந்து பெரிதாக்கியதில் ஏற்படும் விவர இழப்புக்கு வருந்துகிறேன். கிட்டத்தட்ட இதே போன்றதொரு பிரதி துளசியக்காவிடம் இருக்கிறது.
4 comments:
ஆமாம். என்னிடம்தான் இருக்கு.
தினமும் பெரும்பாலான நேரங்களில் மீராவைப் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். அதைத் தொடர்ந்து அதன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளும் மனசில் ஓடும்.
ரொம்ப நன்றி மானஸாஜென்.
simple but superb...
அழகான ஓவியம்... !!!
நன்றி ! தோழர்களே !
அடிக்கடி வந்து போங்க
Post a Comment